கல்லூரி மாணவர் ஏரியில் மூழ்கி பலி..!! பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளில் சோகம்!!

 
நீரில் மூழ்கி பலி

அரியலூர் மாவட்டம் கள்ளங்குடி தெருவில் வசித்து வருபவர்  சங்கர். இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.   இவரது மகன் சபரிவாசன். இவர் கீழப்பழுவூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3ம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார். இந்நிலையில் பாலிடெக்னிக் கல்லூரி மெக்கானிக்கல் இன்ஜினியரிங்  மாணவர்கள்  தத்தனூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தொழில்துறை கண்காட்சியில் கலந்து கொண்டனர்.  

நீச்சல்


கண்காட்சியை பார்வையிடுவதற்காக சபரிவாசனும் நண்பர்களுடன் சென்றார். உடையார்பாளையத்தில் உள்ள பெரிய ஏரியில் சபரிவாசன் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது  எதிர்பாராதவிதமாக சபரிவாசன் தண்ணீரில் மூழ்கிய நிலையில் அவரை மீட்க நண்பர்கள் முயற்சித்தும் முடியாத நிலையில் கரைக்குத் திரும்பி சத்தம் போட்டனர்.  உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்   தண்ணீரில் இறங்கி சபரிவாசனை தேடினர்.

போலீஸ்

இந்நிலையில் இது குறித்து காவல் துறையினர் மற்றும்   தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஏரியில் இறங்கி சபரிவாசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் சபரிவாசன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  இது குறித்து உடையார்பாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  சபரி வாசனின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை