கல்லூரி மாணவர் ஏரியில் மூழ்கி பலி... விநாயகர் சிலை கரைக்கும் போது சோகம்!

 
சதீஷ்

செப்டம்பர் 18ம் தேதி திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் 3 நாட்கள் நடத்தி முடிக்கப்பட்ட  நிலையில்  தற்போது மாவட்டவாரியாக  சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே விநாயகா் சிலை கரைக்கும்போது நீரில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விநாயகர்


செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் பகுதியில் விநாயகா் சதுா்த்தியில்  விநாயகா் சிலை அமைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினா். 3ம் நாளான புதன்கிழமை மாலை விநாயகா் சிலையை அங்கிருந்து மேல்புழுதியூா் ஏரியில் கரைப்பதற்கு ஊா்வலமாகச் எடுத்துச் சென்றனா்.ஏரி தண்ணீரில் விநாயகா் சிலையை கரைத்துக் கொண்டிருக்கும்போது பக்கிரிபாளையம் கிராமத்தில் வசித்து வரும்  மணிகண்டன் மகன் சதீஷ்  சிலைக்கு அடிப்பகுதியில் சிக்கிவிட்டார். சதீஷ்  கல்லூரி முதலாம் ஆண்டு கல்லூரி மாணவா் படித்து வருகிறார்.  சிறிது நேரம் கழித்து சதீஷைக் காணவில்லை என தேடும்போது, சிலை கரைக்கும்போது தண்ணீரில் இறங்கினாா். சதீஷுக்கு  நீச்சல் தெரியாது என அவரைப் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.

ஆம்புலன்ஸ்
சதீஷ் சிலைக்கு அடியில் சிக்கியதும்  நீரில்  தேடத் தொடங்கினர். அத்துடன்  தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெவிக்கப்பட்டதும் உடனடியாக  வந்து ஏரியில் இருந்த புதை குழியில் சிக்கிக் கொண்ட சதீஷின் சடலத்தை மீட்டனா். 108 ஆம்புலன்ஸ் மூலம் சதீஷின் சடலம்  பிரேத பரிசோதனைக்காக  திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web