படிப்ப பாரு மொதல்ல.. பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை..!

 
நவீன்குமார்

இந்த கால பிள்ளைகள் பெற்றோர், ஆசிரியர் ,பெரியோர் என யாரும் எதுவும் சொல்லிவிடக்கூடாது. அதிலும் முடியாது, கிடையாது, இல்லை என சொன்னாலே மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகின்றனர். இதனால் பல நேரங்களில் விபரீத முடிவுகளுக்கு சென்று விடுகின்றனர். பெற்றோர், ஆசிரியர், நல விரும்பிகள் நம்மைவிட அனுபவசாலிகள் என்பதை ஏற்றுக்கொள்வதே கிடையாது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள தழுதாளப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் வடிவேலு. இவர்  கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார்.  இவரது மகன் நவீன்குமார் .  

மாணவர் தற்கொலை

இவர் முசிறியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங்  படித்து வந்தார்.   நவீன்குமார் விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். லால்குடி பகுதியில் வேலைக்கு சென்றபோது  ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு  காதலாக மாறியடு. இந்த விவகாரம் வீட்டில் தெரிந்த போது  நவீன்குமாரின் பெற்றோர் முதலில் படிப்பில் கவனம் செலுத்து, பிறகு திருமணத்தை பற்றி யோசிக்கலாம் எனக் கூறியுள்ளனர்.  வீட்டில்   கண்டித்ததால் நவீன்குமார் அய்யனார் கோவில் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

ஆம்புலன்ஸ்

அதே போல்  கயிற்றுடன் மரத்தில் ஏறி மரக்கிளையில் நின்று தற்கொலை செய்யப் போவதை கயிறை மாட்டிக் கொண்டு அதனை தனது செல்ஃபி எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்துவிட்டு பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.நவீன்குமாரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பார்த்ததும் அவருடைய   நண்பர்கள்  மரங்களில் தேடி பார்த்துள்ளனர். பின்னர் கோயில் அருகே உள்ள மரத்தில் சடலமாக தொங்கிய நவீன்குமாரை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web