லோன் ஆப்களில் கடன் பெற்று சூதாட்டம்.. பணத்தை இழந்த விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை..!

 
பாலசாமி நாயக்

லோன் ஆப் மூலம் கடன் வாங்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், எர்ரகொண்டா தாண்டா பகுதியைச் சேர்ந்தவர் ராமாவத் ஸ்ரீராமுலு நாயக். இவரது இளைய மகன் பாலசாமி நாயக். இவர் வினுகொண்டாவில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.

Govt to collect Rs 14,000 crore in GST from online gambling cos next FY -  The Statesman

கல்லூரியில் படித்து கொண்டே பழவியாபாரம் செய்து வந்த நிலையில், ​​ ​​செல்போனில் சூதாட்ட ஆப்களை டவுன்லோட் செய்து, பணத்தை வைத்து விளையாட ஆரம்பித்துள்ளார். தொடர்ந்து பணத்தை இழந்து வருவதால், ஆன்லைன் லோன் ஆப்ஸ் மூலம் கடன் வாங்கினார். இருப்பினும் சூதாட்டம் விடாமல் விளையாடி வந்தார். மேலும் கடன் வாங்கி சூதாடி பணத்தை இழந்தார்.

இந்நிலையில், கடன் சுமையால் பாலசாமி நாயக் மன உளைச்சலில் இருந்தார். இதனால், கடந்த 26ம் தேதி உறவினர்கள் முன்னிலையில் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து வினுகொண்டா காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தேடி வந்தனர்.

இந்நிலையில், எர்ரகொண்டா தாண்டா அருகே உள்ள வனப்பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் அழுகிய நிலையில் இளைஞர் பிணமாக கிடப்பதை கண்டு பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் எஸ்ஐ முகமது பைரோஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் இறந்து கிடந்தவர் காணமல் போன பாலசாமி நாயக் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு அரசு மருத்துவர்களை வரவழைத்து பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் பாலசாமி நாயக்கின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web