பகீர்... கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி படுகொலை... ஓரினச் சேர்க்கையால் விபரீதம்...!
மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியில் வசித்து வருபவர் முகமது ரவுதீன். இவருடைய மகன் பைசல் அப்துல்லா பவாத் ஒத்தக்கடை அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் மாயமானார். இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அதன்படி அழகர்கோவில் மாங்குளம் மலையடிவாரத்தில் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் அவரது உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவருக்கு மதுரை ஆத்திக்குளத்தில் வசித்து வரும் பாலிடெக்னிக் மாணவர் 19வயது ஜெயசீலனுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. பைசல் அப்துல்லா பவாத் மற்றும் ஜெயசீலன் இருவரும் 6 மாதங்களாக நண்பர்களாக இருந்துள்ளனர்.
அவர்கள் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டபோது, அதனை பைசல் வீடியோ எடுத்துவிட்டார். அத்துடன் அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இது குறித்து ஜெயசீலனுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். ஆத்திரம் அடைந்த ஜெயசீலன், பைசலை தனியாக அழகர்கோவில் பகுதியில் மலைக்கு அழைத்து சென்று அங்கிருந்து அவரை தள்ளிவிட்டு கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார். இதனையடுத்து ஜெயசீலன கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க