முழு கடையடைப்பு போராட்டம்; வெறிச்சோடி காணப்படும் சாலைகள்.. இயல்புவாழ்க்கை பாதிப்பு!

 
கடையடைப்பு
 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் புதிய பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து இன்று முழு கடை அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதனால் நகரப் பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுவதுடன் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நகரின் மையப்பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்தப் பேருந்து நிலையத்தை ராசிபுரம் அருகே நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய அணைப்பாளையத்திற்கு இடம் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடையடைப்பு
பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்து அமைப்பதற்காக அணைப்பாளையத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நிலம் வாங்கப்பட்டுள்ளது. இதற்கு ராசிபுரம் நகர மக்களும், அந்த பகுதியின் வணிகர்கள் சங்கம், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினர் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என்பதற்காக ராசிபுரம் நகர பேருந்து நிலைய மீட்புக் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புதிய பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மனு அளித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று ராசிபுரம் நகரத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என நகரப் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை முதல் ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வணிகர் சங்கத்தினர் அனைத்து கடைகளையும் அடைத்து புதிய பேருந்து நிலைய இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடையடைப்பு


ராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட கடைவீதி, பழைய பேருந்து நிலையம் மற்றும் தற்போதைய பேருந்து நிலைய பகுதிகளில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இதனால் இப்பகுதிகளில் நாள் முழுவதும் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து மிகுந்து காணப்படும்.
இச்சூழலில் வணிகர் சங்க கடையடைப்பு போராட்டத்தால் மேற்குறிப்பிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. தவிர பொதுமக்களின் அன்றாட பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.  அதேசமயம், மருந்துக் கடைகள் மற்றும் பால் விற்பனை நிலையங்கள் போன்ற அத்தியாவசிய கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தின் அடுத்த கட்டமாக வரும் 23ம் தேதி  பேருந்து நிலையம் அருகில் அடையாள உண்ணாவிரதம் நடத்தப்படும் என்றும், பேருந்து நிலையத்தை மாற்றும் திட்டத்தை கைவிடும் வரை போராட்டங்கள் தொடரும்” என்றும் கூறினர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!