10 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே சிறைவாசம்.. டன் கணக்கில் கிடந்த குப்பை.. பகீர் கிளப்பிய பெண்கள்!
கோவை காட்டூர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 10 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வராமல் இரண்டு பெண்கள் வசித்து வருகின்றனர். அந்த பெண்களில் ஒருவர் ருக்மிணி, அவருக்கு வயது 60, மற்றொருவர் அவரது மகள் திவ்யா, அவருக்கு 40 வயது. அவர்களில் இருவர் மட்டுமே இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் வசிக்கின்றனர். பல ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வராததாலும், அக்கம் பக்கத்தினர் யாருடனும் எந்த விதமான பேச்சு வார்த்தையும் நடத்தாததாலும் வெளியுலகத் தொடர்பு இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இருவருக்கும் மனநல கோளாறு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக வீடு சுத்தம் செய்யப்படாததால், வீடு குப்பை மேடாக காட்சியளிக்கிறது. அதன் உள்ளே எறும்புகள், கரையான்கள், பல்லிகள், கரப்பான் பூச்சிகள், எலிகள் என பல பூச்சிகள் குடியிருக்கின்றன. வீடு முழுவதும் கிடக்கும் குப்பையில் ஏராளமான விலங்குகள் ஊர்ந்து கிடக்கின்றன. இவ்வாறான சூழ்நிலையால் இருவரும் பாதிக்கப்படுவதுடன், குடியிருப்பில் வசிக்கும் ஏனைய குடும்பங்களும் சுகாதார சீர்கேடு மற்றும் தொற்றுநோய்களால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

உதவிக்கு ஆள் இல்லாமல் தனித்து வாழும் இப்பெண்களின் வீட்டை கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் உடனடியாக சுத்தம் செய்வது அவசியம். வீட்டை சுத்தம் செய்து மனநலம் பாதிக்கப்பட்ட இந்த இரு பெண்களையும் இதுபோன்ற மோசமான சூழலில் இருந்து மீட்டு தகுந்த மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்து உறவினர்கள் இருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே அடுக்குமாடி குடியிருப்பாளர்களின் எதிர்பார்ப்பு. தகவல் அளித்து அவர்களின் நிலையை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
