அதிர்ச்சி... நடிகர் ரவி மோகன் வீட்டிற்கு ஜப்தி நோட்டீஸ்.!
தமிழ் திரையுலகில் முண்ணனி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் ரவி மோகன். இவருக்கு சொந்தமான சொகுசு பங்களா சென்னை ஈசிஆரில் அமைந்துள்ளது. இந்த பங்களா வீட்டிற்கு வங்கி கடன் தவணை செலுத்தாததால் ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈசிஆரில் சொகுசு பங்களாவை வாங்கி மனைவி ஆர்த்தி குழந்தைகளுடன் ரவி மோகன் வசித்து வந்தார்.

வங்கி கடன் மூலமாக சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள சொகுசு பங்களாவை முன்னாள் மனைவி ஆர்த்தியுடன் வாழ்ந்த போது ரவி மோகன் வாங்கியதாக தெரிகிறது. தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்த ரவி மோகன் அந்த வீட்டிற்கு செல்வதில்லை.
அதன்படி, கடந்த 10 மாதங்களாக கடன் தவணை செலுத்தப்படவில்லை என்ற காரணத்தால் வங்கி நிர்வாகம் இந்த நோட்டீசை அனுப்பியுள்ளது. மேலும், ஒரு தயாரிப்பு நிறுவனம், ரவி மோகன் முன்பணமாக பெற்ற 6 கோடி ரூபாயை திருப்பி செலுத்தாததால், அவரது பங்களாவை ஜப்தி செய்ய கோரி வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் ரவி மோகனுக்கு 5.90 கோடி ரூபாய்க்கான சொத்து உத்தரவாதத்தை ஆகஸ்ட் 20, 2025க்குள் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை தாக்கல் செய்யாததால், சொத்துக்களை முடக்க கோரிக்கை வைக்கப்பட்டு, நீதிமன்றம் அதை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. ரவி மோகன் தரப்பு இந்த ஜப்தி நோட்டீசை பெற மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
