நடிகை பிரணிதாவுக்கு ஆண் குழந்தை... குவியும் வாழ்த்துக்கள்!
நடிகை ப்ரணிதாவுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தைப் பிறந்திருக்கிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.‘சகுனி’, ‘மாஸ்’ போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரிச்சியமானவர் நடிகை ப்ரனிதா. கடந்த 2021ல் நிதின் ராஜூ என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு அழகான ஒரு பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இரண்டாம் முறை கர்ப்பம் தரித்திருக்கும் விஷயத்தை சமூகவலைதளங்களில் சொன்னார் ப்ரனிதா. இதனை அடுத்து நேற்று தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
மருத்துவமனையில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கும் ப்ரனிதா, ‘மீண்டும் ஒரு சாகசம் தொடங்கி இருக்கிறது! கடந்த சில நாட்களுக்கு முன்புதான் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவை மிகவும் கடினமான நாட்கள்தான். ஆனாலும் அந்த மேஜிக் தருணங்கள் என் நினைவில் இருக்கும்’ எனக் கூறியிருக்கிறார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!