காங்கிரசுக்கு ஓட்டுப்போடலன்னா திட்டங்கள திரும்ப பெறுவோம்... எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு!

 
பாலகிருஷ்ணா

லோக்சபா தேர்தலில் மக்கள் அதிக காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தால், உத்தரவாதங்கள் தொடரலாம் என்று கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஹெச்.சி.பாலகிருஷ்ணா கூறினார்; இல்லை என்றால், மக்கள் உத்தரவாதங்களை நிராகரித்ததாக அர்த்தம். கர்நாடக மாநிலம் ராமநகர்  ஸ்ரீகிரிபுராவில் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மகடி தொகுதி எம்எல்ஏ பாலகிருஷ்ணா  சர்ச்சையான கருத்துக்களை பேசியுள்ளார். இந்த பேச்சுக்கு இந்திய முழுவதும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புக்களும் பதிவாகியுள்ளன. அந்த உரையில் பாலகிருஷ்ணா ” லோக்சபா தேர்தலில் காங்கிரஸ்  அதிக இடங்களில் வெற்றி பெறாவிட்டால், மாநிலத்தில்  ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 5 திட்டங்களை மாநில அரசு  முடிவுக்கு கொண்டு வர முடியும் என பேசியுள்ளார்.   மேலும்  “ நாம்  அனைவரும் இந்துக்கள்,  கோவில்களை கட்டுங்கள்.

பாலகிருஷ்ணா

அதே நேரத்தில்  கோவில்களின் பெயரில் ஓட்டு கேட்பது சரியல்ல,'' எனக் கூறியுள்ளார்.  இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம்  தான் பேசியதாக பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.  முதல்வரிடம்  “மக்கள் மக்களவைத் தேர்தலின்போது மாநிலங்களில் அதிக காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தால், அமலில் இருக்கும் திட்டங்கள் தொடரப்படும்.  இல்லையெனில் அவைகளை திரும்ப பெறுவோம் . அத்துடன் எங்களின் திட்டங்களுக்கு மதிப்பு இல்லாத இடத்தில் அவைகளை ரத்து செய்து நாங்களும் கோவில்கள் கட்டி அட்சதை கொடுப்போம்” எனக் கூறியுள்ளார்.   இந்த கருத்துக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாஜக தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்கள் உத்தரவாதம் என்ற பெயரில் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர் என பாஜக  மாநில தலைவர் விஜயேந்திரர் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் “ஜனநாயக அமைப்பில் பிச்சைக்காரர்களைப் போல மக்களை அச்சுறுத்துவதும், அவர்களை அவமதிப்பதும் மன்னிக்க முடியாத குற்றமாக இருந்து வருகிறது.  

ராகுல் காந்தி

மாநில மக்களிடம் காங்கிரஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.  கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு 2023 மே மாதம் முதல் தற்போது வரை5 திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் ஒருவருக்கு ஒவ்வொரு மாதமும் 10 கிலோ அரிசி , குடும்பங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ2000 உதவித் தொகை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், இளைஞர்களுக்கு  வேலையின்மை உதவித்தொகை இத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.   இது குறித்து   பாலகிருஷ்ணா “எந்தப் பகுதியில் காங்கிரசுக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அடுத்த 5 ஆண்டுகள் அவர்களுக்காக மட்டும் வேலை செய்வோம். அவர்களை பற்றி சிந்தித்து திட்டங்களை செயல்படுத்துவோம்.  எந்தெந்த கிராமங்கள்  நல்ல தலைமையை தருகிறதோ, அவர்களுக்காக மட்டும் பாடுபடுவோம்.” எனக் கூறியுள்ளார்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web