அதிர்ச்சி வீடியோ... வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க சதி.. அச்சத்தில் பயணிகள்!!

 
வந்தே பாரத்

இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  இதனை மேலும் மேம்படுத்தும் பொருட்டு இந்தியாவில் 75 நகரங்களை   இணைக்கும் படி வந்தே பாரத் விரைவு ரயில் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.  அதன்படி முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை 2019  ஜூன் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தற்போது 40க்கும் மேற்பட்ட  வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகின்றன.  


 

சமீபத்தில் சென்னை நெல்லை, தெலங்கானா,  ஆந்திரா, கர்நாடகா, பீகார், ராஜஸ்தான் என நாடு முழுவதும் 9 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை காணொளி காட்சி மூலாம்  மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில்  ராஜஸ்தானில் உள்ள வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க மர்ம கும்பல் சதி திட்டம் தீட்டியது வெட்டவெளிச்சமாகியுள்ளது.  ராஜஸ்தானின் கங்கரர் - சோனியானா பிரிவில் உள்ள பாதையில் வந்தே பாரத் ரயில் செல்லும் வழியில் ஜாக்கிள் பிளேட்டில் சிறு சிறு கற்கள் தொடர்ச்சியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதனை கண்ட சிலர் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்க்கையில், தண்டவாளப்பாதையில் கற்கள் இருந்ததும், வேறு பகுதியில், இரும்பு கம்பிகள் இருந்ததும்  உறுதி செய்யப்பட்டது.

வந்தே பாரத்

 அவைஉடனடியாக அகற்றப்பட்டு மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டது.   சில நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டதால்  பயணிகள் அச்சத்தில் இருந்தனர். காலை சுமார் 10 மணியளவில் நடந்த இச்சம்பவம் குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.முன்னதாக வந்தே பாரத் ரயில்கள் மாடுகள் முட்டி சேதமடைவது  குறித்த  செய்திகள் தொடர்ந்து வெளிவருகின்றன.  மேலும் பழி வாங்குவதற்காக ஒருவர் வந்தே பாரத் ரயில் மீது கற்களையும் வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web