தொடரும் விபரீதம்... பள்ளி மாணவன் காரை ஓட்டியதில் கட்டிடத் தொழிலாளி உடல் நசுங்கி பலி!
கோவை பீளமேடு அவிநாசி சாலையில் ஜூலை 17ம் தேதி புதன்கிழமை அதிகாலையில் பிளஸ் டூ மாணவர் ஒருவர் காரை ஓட்டிச் சென்றார். இவர் காரை அதிவேகமாக ஓட்டியதில் கார் சென்டர் மீடியனின் சிமென்ட் கற்களில் மோதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த விபத்தில் பிளஸ் டூ படிக்கும் மாணவன் காருக்குள் மாட்டிக் கொண்ட நிலையில் அங்கிருந்த கட்டிடத் தொழிலாளர்கள் அவரை மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து ப்ளஸ் 2 மாணவர் மீதும், காரை ஓட்ட அனுமதித்த அவரது தந்தை மீதும், காரை வைத்திருந்த தாத்தா மீதும் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த புலம் பெயர் தொழிலாளி மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் மாவட்டத்தில் உள்ள ஜம்போனி கிராமத்தைச் சேர்ந்த 23 வயது அக்ஷய் வேரா. அஷய் அவிநாசி சாலை உயர்மட்ட தாழ்வாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இது குறித்து ” கோவை அவிநாசி சவுரிபாளையம் மகாலட்சுமி கோவில் தெருவில் வசித்து வருபவர் மோகன்ராஜ் மகன் 17 வயது சுஜித். இவர் பீளமேடு ஃபன் ரிபப்ளிக் மால் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.

இவர் ஜூலை 17ம் தேதி புதன்கிழமை அதிகாலையில் பெற்றோர் தூங்கி கொண்டிருந்தபோது யாருக்கும் தெரியாமல் தனது வீட்டில் இருந்து செடான் காரை வெளியே எடுத்து ஓட்டி வந்தார். சாலையில் அவர் கால் டாக்சியை கடக்க முயன்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்தது . இழந்த வேகத்தில் கட்டிடத் தொழிலாளி மீது மோதி செண்டர் மீடியனில் நிலைகுத்தி நின்றது. அந்த கார் தீப்பிடித்து எரிந்து முழுவதும் சேதம் அடைந்து விட்டது. சிறுவனின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
