பகீர் வீடியோ... கண்டெய்னர் லாரி பேருந்தில் மோதி 11 பேர் துடிதுடித்து பலி..15 பேர் படுகாயம்!!

 
மருத்துவமனை

பேருந்து ஒன்று குஜராத்திலிருந்து மதுராவுக்கு இன்று அதிகாலை 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பரத்பூர் மாவட்டத்தில் உள்ள ஹன்ட்ரா மேம்பாலத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நிறுத்தப்பட்டது. பேருந்தின் பின்னாலேயே வேகமாக வந்து கொண்டிருந்த லாரி பேருந்தின் பின்னால் பயங்கரமாக மோதியது.


இந்த விபத்தில் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த  5 ஆண்கள், 6 பெண்கள் உட்பட   11 பேருந்து பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அதில் 11 பேர் பலியாகினர் 15 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.  

விபத்து


 குஜராத்தின் பால்நகரில் வசித்து வரும்  மதுபென், அம்பாபென், கம்புபென், அந்து, நந்த்ரம், லல்லு, ரமுபென், அஞ்சுபென், பாரத், லால்ஜி மற்றும் மதுபென்  இவர்கள் அனைவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  கண்டெய்னர் லாரி ஓட்டுனரின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டதாக   லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web