இன்றும் தொடர்கிறது பரந்தூர் கிராம மக்கள் போராட்டம்... 125 பேர் மீது வழக்குப் பதிவு!
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பல்வேறு அமைப்புகள், விவசாய சங்களைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இன்றும் பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைய உள்ள நிலையில், இந்த பணிகளுக்காக சுமார் 5300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முழுவதும் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர்.
பரந்தூர் விமான நிலையத்துக்காக ஏகனாபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை வெளியிட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனுக்களை கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது போராட்டம் நடைபெறும் ஏகனாபுரத்தில் முதல்கட்டமாக 152.95 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த பொதுமக்கள் ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு சாலை மறியலில் ஈடுட்டனர். போலீசார் இவர்களை தடுத்து கலைந்து போக செய்தனர். இந்தச் சாலை மறியல் தொடர்பாக 60 பெண்கள் உள்பட 125 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இன்றும் அந்தப் பகுதி பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருவதால் ஏகனாபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!