தொடர் விடுமுறை... தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

 
ரயில் கூட்டம் வெளியூர் செண்ட்ரல்

அக்டோபர் 3ம் தேதி பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை தினங்களாக அமைந்துள்ளாது. இந்நிலையில், சென்னையில் இருந்து பலரும் வெளியூர் புறப்பட்டு செல்வதால் தாம்பரம் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

இன்று இரவு தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை முன்பதிவில்லாத 15 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதே போன்று சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு ஆகிய ஊர்களுக்கு இன்று 885 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பேருந்து

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு இன்று 185 சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய ஊர்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இதே போல சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரம் வடக்கு பகுதிக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இன்றிரவு 10.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, நாளை மதியம் 2.05 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் அக்டோபர் 5ஆம் தேதி இயக்கப்படுகிறது. இன்று மாலை 4.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் புறப்பட்டு நாளை காலை 10.30 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தை இந்த ரயில் வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 எக்ஸ்பிரஸ் ரயில்

மேலும், சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு முன்பதிவு இல்லாத மெமு விரைவு சிறப்பு ரயில் இன்று இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இன்றிரவு 11.45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, நாளை காலை 10.15 மணிக்கு மதுரையை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர் விடுமுறையால் தாம்பரம் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரெயில்களின் பொதுப்பெட்டிகளில் மக்கள் முண்டியடித்து ஏறி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?