"கூலி" பட நடிகைக்கு திருமணம்... உற்சாகத்துடன் அறிவித்த நடிகை!
கன்னட திரைஉலகில் பிரபல நடிகை ரச்சிதா ராம், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்திலும் நடித்திருந்தார். 33 வயதான இவர் ரசிகர்களால் ‘டிம்பிள் குயின்’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். புனித் ராஜ்குமார், தர்ஷன் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் பெங்களூருவில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பங்கேற்றார். அப்போது நிருபர்கள் அவரது திருமணம் குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த ரச்சிதா ராம், “இன்னும் சில நாட்களில் நான் திருமண வாழ்க்கையில் கால் பதிக்க இருக்கிறேன்.

கணவனாக வரப்போகிறவர் எனக்கு பிடித்தவராக இருக்க வேண்டும் என்று நான் கனவும் வைத்திருக்கவில்லை. வீட்டில் வரன் பார்க்கும் படலம் வேகமாக நடந்து வருகிறது” என தகவல் வெளியிட்டார்.நடிகை ரச்சிதாவின் நடிப்பில் லேண்ட் லார்ட் மற்றும் அயோக்யா-2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
