தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா ... பீதியில் மக்கள்..!

 
கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக அடுத்தடுத்த தகவல்கள் மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது. இத்தகவல் குறித்து சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின்  அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று  கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும்   கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 கொரோனா

கொரோனா  பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் தொடர் கோரிக்கைகள்  எழுந்து வருகின்றன. ஆனால் இது குறித்து தமிழக   பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் “ தமிழகத்தில் கொரோனா பரவல் உயர்வதாக வெளிவந்த தகவலில் உண்மை இல்லை.  இது   போன்ற தவறான தகவலைப் பரப்பி மக்களை பதற்றம் அடையச் செய்ய வேண்டாம். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாகவே தினசரி 10 க்கும் குறைவாகவே இருந்து வருகிறது.  கொரோனா பரவல் அதிகரித்திருப்பது கேரளா, சிங்கப்பூரில் மட்டும் தான். கேரளாவில் பரவிவரும் புதிய வைரஸால் பாதிப்புக்கள் இல்லை என இந்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.    

 கொரோனா

 

அதே நேரத்தில் தமிழகம் முழுவதும்    இன்ஃப்ளூயன்ஸா தொற்று பாதிப்புடன் மருத்துவமனைகளை நாடுபவர்களுக்கு  கொரோனா அறிகுறிகள் இருப்பின்  அவர்களுக்கு  ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.  அவசியம் ஏற்பட்டால் தினமும்  மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.   கேரளத்தின் சூழலைக் கண்டு தமிழக மக்கள் அச்சப்படத் தேவையில்லை ” எனத் தெரிவித்துள்ளது.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!