மாநகராட்சி ஊழியர் எலிமருந்து சாப்பிட்டு தற்கொலை!! கதறி துடித்த மனைவி, குழந்தைகள்!!

 
கணேஷ்

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பகுதியில் வசித்து வருபவர்   கணேஷ்  . இவர்   திருச்சி மாநகராட்சியில் பில் கலெக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவியும்,  3 குழந்தைகளும் உள்ளனர். குடும்பத்தின் செலவுகளை சமாளிக்க முடியாமல் கணேஷ் பல இடங்களில் கடன் வாங்கி வந்தார். 

எலி மருந்து

ஆனால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று பிற்பகல் சாப்பிட்டிற்கு பிறகு திடீரென தொடர்  வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி கேட்டபோது எலி மருந்தை சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தார்.

ஆம்புலன்ஸ்


அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி உடனடியாக கணேஷை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்கள்தீவிர சிகிச்சை அளித்த போதும்   கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை