சரியான பதிலடி.. முத்தம் கொடுக்க வந்த இளைஞரின் உதட்டை கடித்து துப்பிய இளம்பெண்!

 
மீரட் பெண் மொஹித் சைனி

தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து அத்து மீறிய நபரின் உதட்டை கடித்து துப்பி, துணிவுடன் தன்னை தற்காத்துள்ளார் இளம்பெண் ஒருவர். 

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரின் தரவுலா என்ற பகுதியில் இளம்பெண் ஒருவருக்கு கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. தனது கணவருடன் மகிழ்ச்சியாக அவர் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், அப்பெண் தங்களது வயலுக்கு சென்றிருந்தார்.

அப்பகுதியில் வசிக்கும் மொஹித் சைனி என்ற இளைஞர் அங்கு வந்துள்ளார். வயலில் பெண் தனியாக வேலை செய்வதை அறிந்து கொண்ட அந்த இளைஞர், அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். ஆடைகளை களைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். 

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

முதலில் பதறிப்போன பெண் பின்னர் சுதாரித்துக்கொண்டு இளைஞரை தள்ளிவிட்டுள்ளார். எனினும் அந்நபர் பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்ததால், ஆத்திரத்தில் மொஹித் சைனியின் உதட்டை ஆக்ரோஷத்துடன் கடித்து சதையை துப்பினார். இதை சற்றும் எதிர்பாராத இளைஞர் அலறி துடித்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்து பெண்ணை மீட்டு இளைஞரை கையும் களவுமாக பிடித்தனர். 

இளம் நடிகர் கைது

பெண் மற்றும் அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் மொஹித் சைனி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் துணிவான நடவடிக்கைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பெண் கடித்ததில் காயமடைந்த மொஹித் சைனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவரைக் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த தொழில் அதிக லாபம் தரும்