நாட்டு வெடி விபத்து... 4 பேர் உடல் சிதறி பலி!

 
ஆவடி
 

ஆவடி அருகே பட்டாபிராமில்   ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு வீட்டிலேயே நாட்டு வெடிகளை தயாரித்து விற்பனை செய்துவந்த நிலையில், திடீரென ஏற்பட்ட வெடிப்பில் தீப்பற்றி வீடு முழுமையாக சேதமடைந்தது.

ஆம்புலன்ஸ்

விபத்து குறித்து தகவலறிந்ததும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகள் அகற்றப்பட்டு வரும் நிலையில், முதல் கட்டத் தகவலின்படி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

போலீஸ்

சம்பவ இடத்துக்கு காவல் ஆணையர் சங்கர் சென்று நிலைமையைப் பரிசோதித்து, மீட்புப்பணிகளை மேம்படுத்தும் வகையில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இடிபாடுகளுக்குள் இன்னும் யாரேனும் சிக்கியுள்ளனரா என தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!