பெரும் சோகம்... கார் லாரியுடன் நேருக்கு நேர் மோதி தம்பதி உயிரிழப்பு!
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 60) மற்றும் அவரது மனைவி கலாவதி (வயது 59) உள்ளிட்ட 5 பேர், இன்று அதிகாலை 60-வது திருமண விழாவிற்காக திருக்கடையூருக்கு செல்லும் போது தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் நரசிங்கன்பேட்டை அருகே கார் எதிரே வந்த லாரியோடு நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சுப்பிரமணியன் மற்றும் கலாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் டிரைவர் உட்பட மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
