மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் திடீர் மருத்துவமனையில் அனுமதி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் . இவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் இன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனை முன்னிட்டு, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், குறைந்தபட்ச சமூக இடைவெளி கடைபிடித்தல், மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களில் முகக்கவசம் அணிதல் இவைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
