டிகிரி முடிச்சாலே போதும்... கூட்டுறவு வங்கிகளில் அசத்தல் பணியிடங்கள்...!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகளுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
தேர்வு முறை : எழுத்து தேர்வு
தேர்வு நடைபெறும் நாள்: டிசம்பர் 24
எழுத்து தேர்வுக்கு பின் நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.
கல்வித்தகுதி : பட்டப்படிப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி : டிசம்பர் 1, 2023
எழுத்து தேர்வில் 200 வினாக்கள் கேட்கப்படும். இது 170 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். 85:15 என்ற எழுத்து தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண் விகிதத்தில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு https://drbtvmalai.net என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!