கேட்ட வரம் அருளும் மூன்றாம் பிறை தரிசனம்...!!

 
இன்று சகல செல்வங்களையும் நம்மிடம் சேர்க்கும் மூன்றாம் பிறை தரிசனம்!

ஒவ்வொரு மாதமும் அமாவாசை அடுத்த மூன்றாம் நாள் வரும் முதல் சந்திர தரிசனமே மூன்றாம் பிறை தரிசனம். மாலை வேளையில் மேற்கு திசையின் அடிவானத்தில் சில நிமிடங்களே நீடிக்கும் இந்த பிறையை தரிசனம் செய்து வந்தால், நம் பாவங்களைப் போக்கி ஆயுளும், ஆரோக்கியமும் நீடிக்கும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.

இன்று கேட்ட வரம் அருளும் மூன்றாம் பிறை தரிசனம்!

சந்திர தரிசனம் என்பது இந்துக்களுக்கு மட்டுமில்ல இஸ்லாம், ஜைன மதங்களும் மூன்றாம் பிறையைக் கொண்டாடுகின்றன. பிறை தெரிந்த பிறகு தான் ரமலான் நோன்பை துவக்கி, முடிக்கிறார்கள்.மூன்றாம் பிறை தரிசனம் செய்வதற்கு முன் ஒருவருக்காவது உணவை தானம் செய்யலாம். நோய் நொடியில்லாமல் செல்வ செழிப்புடன் வாழ மாலை வேளையில், விளக்கேற்றியவுடன் வாசலில் மாக்கோலம் போட்டு, கோலத்தின் நடுவில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பிய தாம்பூலத்தட்டில் காமாட்சி விளக்கை மேற்கு திசை நோக்கி ஏற்ற வேண்டும்.

காசு செல்வம் மகாலட்சுமி பூஜை


வானத்தில் பிறை தெரிந்ததும் மனதில் அவரவர் குலதெய்வங்களை மனத்தில் நிறுத்தி பிறை தரிசனத்தை மூம்மூர்த்தியாக பாவித்து வேண்டுதல்களை சொல்லலாம் . இதன் பின்னர் வாசலில் இருக்கும் காமாட்சி விளக்கை மூன்று முறை வலம் வந்து வடக்கு நோக்கி கீழே விழுந்து வணங்கிட வேண்டும். விளக்கை அணையாமல் வீட்டிற்குள் எடுத்து சென்று பூஜையறையில் வைக்கவேண்டும். சந்திர தரிசனத்தின் போது ‘சந்திரனே… அகிலத்தில் அனைத்திற்கும் சாட்சியாக நிற்பவனே… என் எண்ணங்கள் ஈடேற வாழ்த்து!’ என்று பிரார்த்தனைகளின் முடிவில் நம்பிக்கையோடு சொல்லி வர நினைத்த காரியம் ஈடேறும்.

தொடர்ந்து 3 பிறைகளை தரிசனம் செய்து வணங்கிட நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கப் பெறலாம். ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து பிறை தரிசன வழிபாடு செய்திட மகிழ்ச்சியும் செல்வமும் கூடும்.மாணவர்களுக்கு ஞாபக சக்தியும், பெரியவர்களுக்கு ஆரோக்கியமும்,ஆயுளும் கிடைக்கும். தம்பதியருக்கு ஆதர்ஷ தம்பதியாக திகழும் வாய்ப்பும் குடும்பத்துடன் வழிபடும் போது ஒற்றுமையும் , மகிழ்ச்சியும் நீடிக்கும் என்பது ஐதிகம். கேட்டவருக்கு கேட்ட வரம் அருளும் பிறை தரிசனத்தை காண்போம். வளமோடு வாழ்வோம்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web