தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் 65% அதிகரித்துள்ளன... குஷ்பூ சுந்தர் ஆவேசம்!
கோவை கல்லூரி மாணவி மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, தமிழக பாஜக மகளிர் அணியினர் வெள்ளிக்கிழமை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாநில துணைத்தலைவர் குஷ்பூ சுந்தர் கலந்து கொண்டு பேசினார் .

அப்போது அவர் கூறியதாவது: “தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. 2020ஆம் ஆண்டிலிருந்து தற்போதைய திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் 65% அதிகரித்துள்ளன. இது வெறும் 1% அல்ல, 65% உயர்வு. உங்கள் வீட்டில் ஒரு பெண் அல்லது பெண் குழந்தை இதுபோன்ற கொடுமைக்கு உள்ளானால், ‘24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை பிடித்தோம்’ என்பதே பதிலா வரும்?” என்று கேள்வி எழுப்பினார்.

“இப்போது எந்தத் தாயும் தனது பெண் குழந்தையை வெளியே அனுப்பிவிட்டு, அது திரும்பி வரும்வரை பயத்துடன்தான் இருக்கிறார். ஸ்டாலின் அவர்களுக்கு உண்மையிலேயே மனசாட்சி இருந்தால், அரசியலை விட்டு விலகி வீட்டில் அமர வேண்டும். பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை பாஜக மகளிர் அணியினர் தங்களது போராட்டத்தைத் தொடர்வார்கள்,” என்றும் குஷ்பூ சுந்தர் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
