அதிர்ச்சி... வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... தேர்தல் ஆணையம் தகவல்!

 
வரைவு வாக்காளர் பட்டியல்

இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 1.66 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் ஒரே நபர்களின் பெயர்கள் பல இடங்களில் இடம் பெற்றிருப்பதாகவும், அந்த பெயர்களை நீக்க வேண்டும் என்று சம்விதான் பச்சாவோ டிரஸ்ட் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தது. 

உச்ச நீதிமன்றம்

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றபோது தலைமைத் தேர்தல் ஆணையம் சார்பில், வாக்காளர் பெயர் நீக்கம்,  சேர்ப்பு ஆகியவை குறித்த புள்ளி விவரங்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்திருந்தது. 

அதில், 'மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம்கள் நடத்தப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் புதிதாக 2.68 கோடி பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.மேலும் 1.66 கோடி நபர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி நாட்டில் சுமார் 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழக வாக்காளர் பட்டியலில் இந்தி மொழியில் அச்சான பெயர்கள்!! சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம்!!

அசாம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா ஆகிய 6 மாநிலங்கள் தவிர்த்து வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது. இந்த மாநிலங்களில் தேர்தல் நடந்ததால் அங்கு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட வில்லை' என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

அப்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ''வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நபர்களில் இறந்தவர்கள் விவரம், நிரந்தரமாக வீடு அல்லது ஊர் மாறியவர்கள் விவரம், பெயர் நீக்கப்பட்ட நபர்களின் விவரங்களை தனித்தனியாக தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web