வைரல் வீடியோ!! அஜீத்துடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகர்கள் கூட்டம்!!

 
ajith

நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்திற்கு பிறகு  அடுத்த திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் இசையமைப்பில் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். விடாமுயற்சி படத்திற்கான அறிவிப்பு   மே மாதமே வெளியிடப்பட்டாலும் தொடங்கப்படவில்லை. இதனால் ரசிகர்களும் அப்டேட்டுக்காக  காத்துக் கிடக்கின்றனர்.


 


 நடிகர் அஜித்குமார்   வெளிநாட்டில் தன்னுடைய பைக் சுற்றுலாவை மேற்கொண்டிருந்தார்.  நார்வேயில் அவர் நண்பர்களுடன் பைக்கில் சுற்றிய புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.   இந்நிலையில், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நடிகர் அஜித்குமார்  சென்னைக்கு வந்துள்ளார். இன்று அதிகாலை அஜித்குமார்  சென்னை விமான நிலையம் வந்தபோது அங்கு அவரைக் காண காத்திருந்த ரசிகர்கள் சிலர் செல்பி எடுக்கச் சென்றனர்.


 

விமானநிலையத்தில் நின்று கொண்டிருந்தால் கூட்டம் கூடிவிடும்.  அஜித் அவர்களுக்கு போஸ் எதுவும் கொடுக்காமல் விறுவிறுவென நடந்து சென்றார். அவரை விடாத ரசிகர்கள் விரட்டி சென்று புகைப்படம் எடுக்க முயற்சித்தனர்.   சில நிமிடங்களில் அங்கு ஏராளமான ரசிகர்கள் அஜித்தை சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி  வைரலாகி வருகின்றன. வெளிநாட்டில் இருந்து அஜித் சென்னை திரும்பி உள்ளதால் விரைவில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web