சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

 
சமயபுரம்

 ஆடி மாதம் என்றாலே அம்பிகைக்கு உகந்த மாதம். ஆடி மாதத்தில் அம்பிகை வழிபாட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது காலம் காலமாக பக்தர்களிடையே கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை. ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று காலை முதலே அம்மன் ஆலயங்களில் பெண்கள் கூட்டம் கூட்டமாக வழிபாடு செய்து வருகின்றனர்.

ஆடி 2வது வெள்ளிக்கிழமை! திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள மாரியம்மன் ஆலயங்களுக்கு தலைமைப்பீடமாக திகழ்வது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  பக்தர்களில் பலர் மொட்டை அடித்தும், தீச்சட்டி ஏந்தியும், துலாபாரம் காணிக்கை செலுத்தியும், அலகு குத்தியும் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கூழ் , பானகம் பிரசாதமாக வழங்கி வருகின்றனர்.

சமயபுரம் திருச்சி

கோவிலில் பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் அவர்களை ஒருங்கிணைக்கவும் கோவில் ஊழியர்களுடன் தன்னார்வலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
இதே போல் மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில், துறையூர் மாரியம்மன் கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில் உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் அம்மன் கோவில்களில் அதிகாலை முதல் பெண்கள் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். 

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!