கோவில் கூட்ட நெரிசலில்... 9 பேர் பலி, பலர் படுகாயம்... பெரும் பரபரப்பு!

 
ஆந்திரா
 

ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுக்கா பகுதியில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் நேற்று ஏகாதசி தினத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். பக்தர்கள் தரிசனத்திற்காக பெருமளவில் வரிசையில் நின்றிருந்தபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

ஆந்திரா

இந்த பரபரப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சம்பவ இடத்துக்குச் சென்று போலீசார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் கே. அச்சன் நாயுடு உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று நிலைமையை பார்வையிட்டார். அவர் கோவில் நிர்வாகிகளிடமிருந்து சம்பவ விவரங்களை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையாக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!