அழகான குட்டி செல்லம்... நடிகை தீபிகாவின் மகள் புகைப்படம் வெளியானது... ரசிகர்கள் வாழ்த்து!
பிரபல இந்தி திரைப்பட நடிகை தீபிகா படுகோனேவின் மகள் துவா படுகோனே சிங் முகத்தை முதன்முறையாக தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு வெளிப்படுத்தி உள்ளனர். ரசிகர்கள் ‘அழகு குட்டி செல்லம்’ என்று கொண்டாடி வருகின்றனர். கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி, கடந்த 2024 செப்டம்பர் 8ம் தேதி துவாவை வரவேற்றது குறிப்பிடத்தக்கது.
தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட குடும்பப் புகைப்படங்களில், தீபிகா மற்றும் துவா இருவரும் சிவப்பு ஆடையில் இணைந்து போஸ் கொடுத்துள்ளனர். ரன்பீர், மனைவி மற்றும் மகளை அன்போடு அணைத்துக்கொண்டு நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. கடைசி புகைப்படத்தில், துவாவை மடியில் உட்கார வைத்த தீபிகா, அவரது சிறிய கைகளை ஒன்றாக கோர்த்தபடி பிரார்த்தனை செய்யும் காட்சி ரசிகர்களை உருக்கி உள்ளது.
“Happy Diwali” என்று குறுகிய பதிவு மட்டும் இணைக்கப்பட்டிருந்தாலும், படங்கள் பல லட்சம் விருப்பங்களை குவித்து வருகின்றன. நடிகர் ராஜ்குமார் ராவ் “So Cute” என்று கருத்து தெரிவித்தார். பிபாஷா பாசு, அனன்யா பாண்டே, கவுர் கான் உள்ளிட்ட பல பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தீபிகா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் டி.பியை “In My Mom’s Era” எனும் வாசகம் கொண்ட டி-ஷர்ட்டோடு மாற்றியிருந்தார். அண்மையில் துவாவின் முதல் பிறந்தநாளுக்காக அவர் சமைத்த கேக்கின் படமும் வைரலானது.
ரன்பீர் தற்போது துரந்தர் மற்றும் டான் 3 படங்களில் நடிப்பில் பிஸியாக உள்ளார். தீபிகா, AA22xA6 படத்தில் அல்லு அர்ஜுனுடனும், கிங் படத்தில் ஷாருக் கான், சுவானா கான் ஆகியோருடனும் நடித்து வருகிறார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
