110கிமீ வேகத்தில் சூறைக்காற்றுடன் நள்ளிரவில் கரையைக் கடந்தது மோந்தா புயல்!
நேற்றிரவு ஆந்திராவை நோக்கி வங்கக்கடலில் உருவான ‘மோந்தா’ புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. நள்ளிரவில் மணிக்கு 17 கி.மீ வேகத்தில் நகரக் துவங்கிய மோந்தா புயல் ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடா மற்றும் மசூலிப்பட்டினம் அருகே கடலோரத்தை அடைந்தது.
நேற்று நள்ளிரவு துவங்கி ஆந்திராவின் பல கடலோர மாவட்டங்களில் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. மோந்தா புயல் காரணமாக அங்கு முழு இரவும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காக்கிநாடா, கிருஷ்ணா, எலுரு, கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி, அம்பேத்கர் கோனசீமா, அல்லூரி சீதாராம ராஜூ ஆகிய 7 மாவட்டங்களில் தங்கியிருந்த 2 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் இன்று காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பேரிடர் மீட்புத்துறையினர், போலீசார் உள்ளிட்ட 10 ஆயிரம் பேர் கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு 1 மணியளவில் ‘மோந்தா’ புயல் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடந்து சென்றது. இதனால் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன; பல பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. புயல் தாக்கம் காரணமாக ஆந்திரா–சென்னை இடையிலான 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
75 ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. 3,778 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1.76 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்ததாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். ஒடிசாவிலும் கனமழை கொட்டி, அங்குள்ள 8 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
