‘மோன்தா’ புயல் எச்சரிக்கை... மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை அவசர அறிவுறுத்தல்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. நாளை மறுதினம் இது புயலாக உருவாகும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உருவாகவிருக்கும் இந்த புயலுக்கு ‘மோன்தா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில மாவட்டங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் சாத்தியம் இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மோன்தா புயலை முன்னிட்டு சுகாதாரத்துறை மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. காய்ச்சல் அதிகம் காணப்படும் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும். கர்ப்பிணிகளை முன்கூட்டியே மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கனமழை காரணமாக நீரில் மூழ்காதவாறு ஜெனரேட்டர்கள் உயர்ந்த இடங்களில் வைக்கப்பட்டு, மருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல் கையிருப்பில் வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
