மோந்தா புயல் நாளை இரவுக்குள் கரையை கடக்கும்!

 
அமுதா

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 480 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். இந்த புயல் காக்கிநாடாவிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 530 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து 560 கிலோ மீட்டர் தொலைவிலும், போர்ட் ப்ளேயரிலிருந்து மேற்கே 890 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

தமிழக மக்களே உஷார்!! மீண்டும் ஒரு புயல் சின்னம்!!

அவர் கூறியதாவது: தற்போது மோந்தா புயல் மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதுடன், நாளை (அக்டோபர் 28) காலை தீவிர புயலாக வலுப்பெறும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை முதல் இரவுக்குள் ஆந்திராவின் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வரை, இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் கூறினார்.

புயல்

மேலும், அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 57 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் எனவும், நாளை திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அமுதா தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!