நாளை மோன்தா புயல் ஆந்திராவில் கரையை கடக்கும்!

 
புயல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுவடைந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இதற்கு ‘மோன்தா’ என பெயரிட்டுள்ளது. தற்போது இந்த புயல் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 480 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

தமிழக மக்களே உஷார்!! மீண்டும் ஒரு புயல் சின்னம்!!

வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, மோன்தா புயல் காக்கிநாடாவுக்கு தெற்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்துக்கு 560 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அதேபோல் அந்தமான் போர்ட் பிளேரில் இருந்து சுமார் 890 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 17 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் இந்த புயல், கடந்த 6 மணி நேரமாக வடமேற்கு திசையில் பயணித்து வருகிறது.

புயல்

முன்னதாக மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்திருந்த புயலின் வேகம் சிறிது அதிகரித்துள்ளது. தற்போது வடமேற்கு திசையில் நகரும் மோன்தா புயல், நாளை (செவ்வாய்க்கிழமை) காக்கிநாடா அருகே மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திரக் கடலோரத்தை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!