வங்கக் கடலில் புயல் அச்சம்... மீன்பிடி படகுகள் கரை திரும்ப நடவடிக்கை!

 
படகு

 

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதையடுத்து கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள், அருகிலுள்ள துறைமுகங்களுக்கு உடனடியாக திரும்புமாறு கடலோர காவல்படை எச்சரித்துள்ளது.

படகு

இந்திய கடலோர காவல்படை தெரிவித்ததாவது, தமிழகத்தைச் சேர்ந்த மீன்பிடி படகுகள், ஆந்திரம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த படகுகள் உட்பட மொத்தம் 985 படகுகள் ஏற்கனவே கரை திரும்ப வழியேற்படுத்தப்பட்டுள்ளன.

கடல் பகுதியில் உள்ள கப்பல் மாலுமிகள் மற்றும் மீனவ மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் எச்சரிக்கை செய்திகளை அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளது. கடற்கரையோர ரேடார் நிலையங்கள் மூலம் மீன்பிடி படகுகளின் நிலை கண்காணிக்கப்படுகிறது.இதனிடையே, எண்ணெய் கிணறுகள் மற்றும் அதன் சொத்துகளின் பாதுகாப்புக்காக தொடர்பு கொண்டு விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது. கடலில் புயல் காரணமாக ஏற்பட்ட கொந்தளிப்பில் மீன்பிடி படகுகள் முன்னெச்சரிக்கையாக கரை திரும்பி பாதுகாப்பாக இருக்கும்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!