சென்னை உட்பட 9 துறைமுகங்களிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.. மீனவர்களுக்கு எச்சரிக்கை!
சென்னை உட்பட 9 துறைமுகங்களிலும் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்க துறைமுகங்களிலும் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2 தினங்களாக வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
