தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

 
65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று! துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!

மோந்தா புயல் வலுவடைந்ததை அடுத்து தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களின் கடலோர பகுதிகளில் வானிலை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு பல துறைமுகங்களில் ஏற்றப்பட்டுள்ளது.

தைவான் சீனா புயல் கனமழை  மழை வெள்ளம்

சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களிலும் இதே வகை எச்சரிக்கை நடைமுறையில் உள்ளது. கடலில் காற்றின் வேகம் அதிகரித்து வருவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை துறை அறிவுறுத்தியுள்ளது.

எச்சரிக்கை கூண்டு

புயல் அடுத்த சில மணி நேரங்களில் மேலும் தீவிரமடைந்து கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளதால், கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மீனவக் கிராமங்களில் எச்சரிக்கை ஒலிபெருக்கிகள் மூலம் தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!