நாளை புயல் சின்னம்... சென்னைக்கு 22, 23 தேதிகளில் ஆரஞ்சு அலெர்ட்!
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (அக். 21) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால், அக். 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு திசையில் நகர்ந்து தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், அதேசமயம் தெற்கு அந்தமான் அருகே உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய தாழ்வு உருவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் தாக்கத்தால் இன்று (அக். 20) முதல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். குறிப்பாக 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், குடியிருப்போர் மற்றும் மீனவர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
