இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி...சிலிண்டர் விலை குறையப் போகுது..!!

 
சிலிண்டர்

ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த மாதம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் செப்டம்பர் 1ம் தேதி சிலிண்டர் விலை பரிசீலித்து நிர்ணயம் செய்யப்படும். அந்த வகையில் செப்டம்பரில் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறையலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சிலிண்டர்

இது குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங்புரி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி  சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.   பெண்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக  கூறியுள்ளார்.  

சமையல் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
வீட்டு உபயோகத்திற்கான சமையல் சிலிண்டருக்கு மத்திய அரசு ஏற்கனவே ரூ. 200 மானியம் வழங்கி வருகிறது. கொரோனா காலகட்டத்தில் 3 இலவச சிலிண்டர்களை வழங்கியதன் மூலம், நலிவடைந்த மற்றும்  வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு உதவி வருகிறது.  கடந்த ஆட்சியில் கச்சா எண்ணெய்யாக செலவுகள் இன்னும் நிறைய பாக்கி உள்ளதால் கூடுதல் நிதிச்சுமை காரணமாக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.   ஜூலை 4ஆம் தேதி டெல்லியில் வர்த்தக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.7 உயர்த்தப்பட்டது. இருப்பினும், ஜூலை மாதத்தில் கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னையில்  வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web