தலித் இளைஞரை தலைகீழாக தொங்கவிட்டு, அடியில் நெருப்பிட்டு கொடூர தாக்குதல்!! பகீர் வீடியோ!!

 
கிரண் தேஜா

மணிப்பூர் கலவரத்தை தொடர்ந்து மத, இன, சமூக ரீதியான கலவரங்கள் ஆங்காங்கே அதிகரித்து வருகின்றன. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டம் மந்தமரி நகரின் அங்காடி பஜாரில் வசித்து வருபவர் ஆடு வியாபாரி கொமுராஜுலா ராமுலு. இவர் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில்  ஆட்டு கொட்டகையில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.


கடந்த 20 நாட்களுக்கு முன், மந்தையிலிருந்து ஒரு ஆடு  காணாமல் போனது.   ஆடு மேய்த்துவ் வந்த  தேஜா , கிரண் மீது சந்தேகம் அடைந்து இருவரையும் கொட்டகைக்கு அழைத்து விசாரித்தார். அவர்கள் தெரியாது எனக் கூறியதும்   2 இளைஞர்களையும் ஆட்டு கொட்டகையில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டார். அவர்கள் மீது விடாத தாக்குதல் நடத்தினார். அதன் கீழே   தீ மூட்டி புகை போட்டு ஆடுகளை திருடியதாக ஒப்புக்கொள்ள வற்புறுத்தியுள்ளார்.   வீட்டில் இருந்து வெளியே சென்ற கிரண் இரவு வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அவரை தேடத் தொடங்கினார்.எங்கும் காணாததால்  கிரணின் அத்தை  போலீசில் புகார் அளித்தார்.

தேஜா கிரண்

 இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் பகீர் உண்மைகள் வெளிவந்தன.   வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ராமுலு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  
மேலும் ராமுலுக்கு அவரது மகன் ஸ்ரீனிவாஸ், அவரது மனைவி ஸ்வரூபா மற்றும் நரேஷ்  இவர்களின் உதவியுடன் தான் கொடுமையை அரங்கேற்றியுள்ளார். இதனையடுத்து இவர்கள் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இந்த வீடியோ   புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web