ஆபத்தான கார் டிரைவிங்... ரூ57000 அபராதம்!

 
கார்


உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள முக்கிய சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரை ஓட்டிய நபர் விபத்தை ஏற்படுத்தும் வகையில் வேகமாக சென்றார். 

நகரின் முக்கிய சாலையில் சாகசம் செய்வதுபோல் ஆபத்தான முறையில் காரை இயக்கியுள்ளார் . இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இந்நிலையில், விபத்தை ஏற்படுத்தும் வகையில் கார் ஓட்டிய நபருக்கு கிரேட்டர் நொய்டா போலீசார் அபராதம் விதித்துள்ளது.  

சமூக வலைதளங்களில்  வைரலான அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த காரின் பதிவெண் அடிப்படையில் அதன் உரிமையாளருக்கு நொய்டா போக்குவரத்து போலீசார் ரூ 57500 விதித்துள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?