5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு!!

இந்தியா முழுவதும் 2024ல் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதே நேரத்தில் மிசோரம் சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் 17ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதேபோல், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது.
குறிப்பிட்ட இந்த மாநிலங்களில் வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் தயார் நிலை குறித்தும் தேர்தல் ஆணைய அதிகாரிகள், பல்வேறு ஆலோசனைகளை செய்தனர். டெல்லியில் இது குறித்து நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் தேர்தல் மேற்பார்வையாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த 5 மாநிலங்களில் எப்போது தேர்தல் நடத்துவது என்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டசபை பதவிக்காலம் நிறைவடைய உள்ள 5 மாநிலங்களின் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று அறிவித்தார். அதன்படி, மிசோரம் மாநிலத்திற்கு நவம்பர் 7-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஷ்கார் மாநிலத்திற்கு நவம்பர் 7 மற்றும் 17-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மத்தியபிரதேச மாநிலத்திற்கு நவம்பர் 17-ம் தேதியும், ராஜஸ்தான் மாநிலத்திற்கு நவம்பர் 23-ம் தேதியும், தெலுங்கானா மாநிலத்திற்கு நவம்பர் 30-ம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
மிசோரம் :
வாக்குப்பதிவு : நவம்பர் 7
வேட்புமனு தாக்கல் : அக்டோபர் 13 முதல் 20 வரை
வேட்புமனுக்கள் பரிசீலனை : அக்டோபர் 21
வேட்புமனுக்களை திரும்ப பெறுதல் : அக்டோபர் 21
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு : நவம்பர் 17
வேட்புமனு தாக்கல் : அக்டோபர் 21 முதல் 30 வரை
வேட்புமனுக்கள் பரிசீலனை : அக்டோபர் 31
வேட்புமனுக்களை திரும்ப பெறுதல் : நவம்பர் 2
வாக்கு எண்ணிக்கை : டிசம்பர் 3
மத்திய பிரதேசம்:
வாக்குப்பதிவு : நவம்பர் 17
வேட்புமனு தாக்கல் : அக்டோபர் 21 முதல் 30 வரை
வேட்புமனுக்கள் பரிசீலனை : அக்டோபர் 31
வேட்புமனுக்களை திரும்ப பெறுதல் : நவம்பர் 2
வாக்கு எண்ணிக்கை : டிசம்பர் 3
ராஜஸ்தான் :
வாக்குப்பதிவு : நவம்பர் 23
வேட்புமனு தாக்கல் : அக்டோபர் 30 முதல் நவம்பர் 6 வரை
வேட்புமனுக்கள் பரிசீலனை : நவம்பர் 7
வேட்புமனுக்களை திரும்ப பெறுதல் : நவம்பர் 9
வாக்கு எண்ணிக்கை : டிசம்பர் 3
தெலுங்கானா :
வாக்குப்பதிவு : நவம்பர் 30
வேட்புமனு தாக்கல் : நவம்பர் 3 முதல் 10 வரை
வேட்புமனுக்கள் பரிசீலனை : நவம்பர் 13
வேட்புமனுக்களை திரும்ப பெறுதல் : நவம்பர் 15
வாக்கு எண்ணிக்கை : டிசம்பர் 3
சத்தீஷ்கர் :
முதற்கட்ட வாக்குப்பதிவு : நவம்பர் 7
வேட்புமனு தாக்கல் : அக்டோபர் 13 முதல் 20 வரை
வேட்புமனுக்கள் பரிசீலனை : அக்டோபர் 21
வேட்புமனுக்களை திரும்ப பெறுதல் : அக்டோபர் 23
வாக்கு எண்ணிக்கை : டிசம்பர் 3
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...