ஒரே வாரத்தில் தவெக கட்சிக்கொடி அறிமுகம்... தொண்டர்கள் உற்சாகம்!

 
விஜய்

 
 
தமிழகத்தில் நடிகர் விஜய் பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல் தான் குறிக்கோள் என தெரிவித்துள்ளார்.  தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம்  தீவிரமாக அரசியல் வேலைகளில் கவனம் செலுத்த உள்ளார்.  அடுத்தகட்டமாக, தமிழக வெற்றிக் கழகம்  மாநாடு பிரமாண்டமாக திருச்சியில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

விஜய் மக்கள் இயக்கம்

இது ஒரு புறம் இருக்க மற்றோரு புறம் அடிக்கடி கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடந்து வருகிறது.
அதன்படி கட்சியின்  பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். இந்நிலையில், அவருக்கு வாழ்த்துக்களை  தெரிவிக்க தவெக நிர்வாகிகள் புதுச்சேரியில் உள்ள அவருடைய இல்லத்திற்கு  சென்று இருந்தனர்.  அவருக்கு அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

விஜய்
அதன்பின், நடைபெற்ற கூட்டத்தில் பேசிய  புஸ்ஸி ஆனந்த் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கொடி இன்னும் ஒரு வாரத்தில் அறிமுகம் செய்யப்படும்.  அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனவும் கூறியுள்ளார்.  இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து முடித்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதனையடுத்து 69 படத்தில் நடித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு  முழுவதுமாக சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியல் பணியில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!