காருக்குள் உயிரிழந்த நிலையில் இந்திய மாணவர் சடலம்.. தொடரும் பயங்கரங்கள்... !!

 
ஆதித்யா

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் உயிரிழப்பு தொடர்கதையாகி வருகிறது.  அந்த வகையில் அமெரிக்காவின்  ஓஹியோ மாகாணத்தில் இந்திய முனைவர் பட்ட மாணவர் காருக்குள் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாகக் கிடந்தார்.  இவருக்கு வயது  26.  இவர் ஆதித்யா அட்லாகா . இவர்  சின்சினாட்டி பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் 4 வது ஆண்டாக பி.எச்.டி. பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தார்.நவம்பர் 9ம் தேதி இவர்  வெஸ்டர்ன் ஹில்ஸ் சாலையில் சுவரில் மோதி நின்ற காருக்குள் ஆதித்யா சுட்டுக் கொலை செய்யப்பட்டு பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.   காலை 6:20 மணிக்கு இந்த   துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என  விசாரணையில் தெரிய வந்துள்ளது.


அமெரிக்கா போலீஸ்
 அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் 911 என்ற அவசர உதவி எண்ணில்  காருக்குள் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி இருப்பதைத் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டின்போது ஆதித்யாவின் காரில் பக்கவாட்டுப் பகுதியிலும் ஜன்னலிலும் மூன்று புல்லட் துளைகள் இருந்தன. ஆதித்யா ஆபத்தான நிலையில் ஹாமில்டன் கவுண்டியில் உள்ள யு.சி. மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்து விட்டார்.

அமெரிக்க உளவு விமானம்

துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து  ஊடகங்கள் இது சம்பந்தமாக இதுவரை  யாரும் கைது செய்யப்படவில்லை என  செய்தி வெளியிட்டுள்ளன.அட்லகா தனது மருத்துவக் கல்வியைத் தொடர வட இந்தியாவில் இருந்து சின்சினாட்டிக்கு வந்தவர். புது டெல்லியில் உள்ள டெல்லி பல்கலைக்கழகத்தின் ராம்ஜாஸ் கல்லூரியில் 2018 ல் விலங்கியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தார்.  மேலும் தலைநகர் டெல்லியில்  அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் 2020 ல் உடலியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

From around the web