உஷார்... எலெக்ட்ரிக் வாகன விபரீதம்... லித்தியம் பேட்டரியுடன் லிப்டிற்குள் நுழைந்த இளைஞன் தீப்பிடித்து பலி; அதிர்ச்சி வீடியோ!

 
லிஃப்ட்

இப்படியெல்லாம் கூட மரணம் சம்பவிக்குமா என்று அதிர்கிறார்கள் அந்த வீடியோவைப் பார்த்தவர்கள். லித்தியம் பேட்டரியை எடுத்துக் கொண்டு லிப்டிற்குள் நுழைந்த இளைஞன், திடீரென லித்தியம் பேட்டரி வெடித்து தீப்பிடித்ததால் கொடூரமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 
லித்தியம் பேட்டரிகளின் பாதுகாப்பு குறித்த கவலைகள், குறிப்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகளை மிகவும் கவனமாக கையாளுங்கள் என்று இந்த வீடியோ மரண பயத்தை ஏற்படுத்தி கற்று தருகிறது. வீடியோவைப் பார்த்த பயனர்களை அதிர்ச்சிக்குள் உறைந்துள்ளனர். 



"வீடியோவில் இளைஞர் ஒருவர் லித்தியம் பேட்டரியை கைகளில் எடுத்துக் கொண்டு லிஃப்டிற்குள் நுழைகிறார். திடீரென தீப்பிடித்து, அந்த நபர் சாம்பலானார். எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் லித்தியம் பேட்டரிகளும் உள்ளன. மூடிய இடங்களில் அவற்றைப் பயன்படுத்துவதில் ஒருவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என்று நேற்று ஜூலை 25ம் தேதி பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 
வீடியோவின் தொடக்கத்தில் லித்தியம் பேட்டரியை வைத்திருக்கும் இளைஞவன் லிஃப்டில் நுழைவதைக் காணலாம். லிஃப்ட் கதவுகள் மூடப்படுகின்றன. அதன் பின்னர் அடுத்த நிமிடத்திலேயே பேட்டரியால் பெரிய வெடிப்பு உருவாக்கப்பட்டது. இளைஞனின் எரிந்த உடல், பாதுகாப்புப் பணியாளர்களால் லிப்டில் இருந்து அகற்றப்படுவது கிராபிக் காட்சிகளில் காணப்படுகிறது.
லித்தியம் பேட்டரிகள், குறிப்பாக இறுக்கமான பகுதிகளில் ஏற்படும் அபாயங்களைப் பற்றிய பொதுப் புரிதலின் அவசியத்தை வலியுறுத்த பலர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர்.

லிஃப்ட்
இந்த லிஃப்ட் மற்றும் மூடிய இடங்களிலோ, பாதுகாப்பற்ற இடங்களிலோ அபாயமான மின் சாதனங்களின் அருகிலோ லித்தியம் பேட்டரிகளைப் பயன்படுத்துவதையோ அல்லது எடுத்துச் செல்வதையோ தவிர்க்கவும்.
பேட்டரிகள் தேய்மானம் அல்லது சேதம் ஏற்பட்டதற்கான அறிகுறிகளை அடிக்கடி பரிசோதிக்கவும். லித்தியம் பேட்டரிகளை கையாளும் போது எச்சரிக்கையுடன் செயல்படவும் மற்றும் உற்பத்தியாளரின் பாதுகாப்பு பரிந்துரைகளை கடைபிடிக்கவும் என்று ஆலோசனைகளைக் கூறி வருகின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web