கரூர் கூட்ட நெரிசலில் பலி 39 ஆக உயர்வு... 50 பேர் கவலைக்கிடம் - செந்தில் பாலாஜி!

 
கரூர்

கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்திருப்பதாக செந்தில் பாலாஜி தெரிவித்த நிலையில், பலி எண்ணிக்கை 39 ஆக உயர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களுள் 6 குழந்தைகளும், 16 பெண்களும் அடங்குவர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் மாவட்ட அரசு மருத்துவமனையில் கள நிலவரத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுடன் பேசிய செந்தில் பாலாஜி, விஜய் பிரசாரத்தில் 31 பேர் பலியானதாகவும், 58 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். அவர்களில் 50 பேர் கவலைக்கிடமான முறையில் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கரூர்

அவர்களுள் 46 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் அனைவருக்கும் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர்காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

விஜய்

இந்நிலையில், விடுப்பிலுள்ள மருத்துவர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், நாமக்கல், சேலம் மாவட்டங்களிலிருந்தும் கூடுதலாக மருத்துவர்கள் வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?