இன்று நெல்லை - எழும்பூர் இடையே தீபாவளி சிறப்பு ரெயில் இயக்கம்... லீவு முடிந்து சென்னை வருபவர்கள் பயன்படுத்திக்கோங்க!

 
ரயில் கூட்டம் வெளியூர் செண்ட்ரல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக இன்று அக்டோபர் 22ம் தேதி நெல்லை மற்றும் எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதன் மூலம் பண்டிகை காலத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் நோக்கம் உள்ளது.

ரயில் எக்ஸ்பிரஸ்

தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பின் படி, நெல்லையில் இருந்து இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சென்னையின் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வரும் சிறப்பு ரெயில் எண் 06166, மறுநாள் காலை 10.55 மணிக்கு இலக்கை அடையும்.

 சிறப்பு ரயில்

மறுமார்க்கமாக, எழும்பூர் ஸ்டேஷனில் இருந்து நாளை (வியாழக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் சிறப்பு ரெயில் எண் 06165, மறுநாள் நள்ளிரவு 12.05 மணிக்கு நெல்லை சென்றடையும். பயணிகள் இந்த தகவலை கருத்தில் கொண்டு பயண திட்டத்தை முன்னிட்டு ஒழுங்குபடுத்தலாம் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?