பிரபல நிதி நிறுவனம் பெயரில் தில்லி பெண் ரூ. 11.95 லட்சம் மோசடி!
தில்லியைச் சேர்ந்த பெண்ணுக்கு பிரபல நிதி நிறுவனம் சார்பில் பேசுவதாக கூறிய மோசடி கும்பல் தொலைபேசியில் தொடர்பு கொண்டது. அவர்கள், கிரெடிட் கார்டில் உள்ள போனஸ் பாயிண்ட்ஸை பயன்படுத்த உதவுவதாக கூறி, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வந்த ஓடிபியை கேட்டனர். பெண் அதை நம்பி ஓடிபியை கூறியதையடுத்து சில நிமிடங்களில், அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 11.95 லட்சம் தொகை பறிக்கப்பட்டது.
அந்தப் பணம் உடனே பல வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. புகார் அளிக்கப்பட்டதையடுத்து போலீசார் தொழில்நுட்ப அடிப்படையில் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட மொபைல் எண்கள் மற்றும் சந்தேக நபர்கள் இருப்பிடத்தை கண்காணித்தனர். இதன்கீழ், மோசடிக்கு மூளையாக இருந்தவர் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
வங்கி அதிகாரிகளாக நடித்து ஓடிபி பெற்று பணம் பறிக்கும் இதுபோன்ற மோசடிகளில், கும்பல் தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியையும் பெறுவதாக போலீசார் தெரிவித்தனர். இத்தகைய சைபர் மோசடிகளில் இருந்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு சைபர் குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
