ஆகஸ்ட் 15ம் தேதி டிமாண்டி காலனி 2 வெளியீடு... !

2015ம் ஆண்டு திகில் கதையை அடிப்படையாக கொண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் டிமாண்ட் காலனி. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படமானது வசூல்ரீதியாகவும் பெரும் வெற்றிப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் டிமாண்டி காலனி 2 படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இப்படத்தில் அருண் பாண்டியன், முத்துக்குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சாம் சிஸ் இசையமைப்பில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில், வெளியீடு குறித்த தகவல் ஏதும் வெளியாகாமல் இருந்தது தற்போது டிமாண்டி காலனி - 2 திரைப்படம் ஆகஸ்ட் 15 ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா