இந்த 4 அறிகுறிகள் இருந்தா டெங்குவா இருக்கலாம்... அலட்சியப்படுத்தாதீங்க..!!

 
வாந்தி

மழைக்காலம் தொடங்கிவிட்டது. அதற்கு முன்னாலேயே மழைக்கால நோய்களான காய்ச்சல், சளி, இருமல் என வரிசைக்கட்டத் தொடங்கிவிட்டன. குறிப்பாக கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.  இந்த வகை காய்ச்சல் இரவு நேரத்தைக் காட்டிலும் பகல் நேரத்தில் கடிக்கக்கூடிய ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் மூலமாக பரவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.  டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கு  முதலில் எந்த ஒரு அறிகுறிகளும் தெரிவதில்லை.

உஷார்!! இந்த 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு !!


தொடர் காய்ச்சல்,  காய்ச்சலோடு சேர்த்து தோலில் சிராய்ப்புகள், சிறுநீர் மற்றும் மலத்தில் ரத்தம் வெளியேறுதல், ஏழு நாள் காய்ச்சல் தொடர்ந்தால் அவை டெங்குவாக இருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.  அதிக காய்ச்சல், மோசமான தலைவலி, சோர்வு மற்றும் தசை மற்றும் மூட்டுகளில் வலி போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
அத்துடன் கண்களின் பின்புறத்தில் வலி, குமட்டல், வாந்தி மற்றும் ஈறுகள் அல்லது மூக்கில் ரத்தக் கசிவும்  டெங்கு காய்ச்சலுக்கான  அறிகுறிகள். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.  இந்த அறிகுறிகள் இருந்தால் இரவு நேரத்தில் நிலைமை மோசமாகும் வாய்ப்புக்கள் அதிகம், இதனால்  பகல் நேரத்தில் இதற்கான தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாக   கருதப்படுகிறது.

காய்ச்சல்
 டெங்கு காய்ச்சலின் போது பிளேட்லெட் செல்களின் எண்ணிக்கை வெகு விரைவாக குறைவது டெங்கு காய்ச்சலின் மிகவும் தீவிரமான ஒரு நிலையாகக் கருதப்படுகிறது. கூடுதலாக டெங்கு காய்ச்சல் இருக்கும் போது குடலின் சுவர்களில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, மலத்தோடு ரத்தம் வெளியேறுவதும் ஆபத்தின் அறிகுறியே.    டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள்   சத்தான உணவுகள் , அதிகளவில் பச்சை நிற காய்கறிகள், நீர் சத்து நிறைந்த காய்கறிகளை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web